
இன்று எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வெளியில் தங்க நேரிடும். அதிகமான பிரயாணங்களால் சோர்வு ஏற்படலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. ஆனாலும் பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று உங்கள் அந்தஸ்து சிறப்படையும். ஆதாயங்கள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும். உங்களால் ஆன உதவிகளை செய்து வந்தால் நல்ல பல பலன்களைப் பெறலாம். பொதுவாக நற்பலன்கள் கிடைக்கும்.
திருஓணம்:இன்று தொல்லைகள் குறையும். எந்த பிரச்சனையிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார சுபிட்சம் சிறப்பாக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். லாபம் கிடைக்கும். உங்களுக்குண்டான கௌரவம் உயரும். திருமணமாகாதவர்களுக்கு அதற்கான நேரம் கனிந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9