Dinapalan 2023
மகரம் - 10-05-2023
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும்.
திருஓணம்: பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: வீண் பேச்சை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9