
இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
திருஓணம்: கையிருப்பு கூடும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9