
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
திருஓணம்: நண்பர்களிடம் பகை ஏற்படலாம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6