
இன்று வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உங்களது ஆலோசனைபடி பிள்ளைகள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும்.
திருஓணம்: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9