
இன்று பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
திருஓணம்: எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: பயணங்கள் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6