தினபலன்
மகரம் - 23-04-2023
இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.
திருஓணம்: குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9