
இன்று உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருஓணம்: இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9