தினபலன்
மகரம் - 31 01 2023
இன்று மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் தரும சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.
திருஓணம்: மனோ தைரியம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: புத்தி தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9