தினபலன்
மிதுனம் - 05-05-2023
இன்று ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
திருவாதிரை: சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6