
இன்று எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
திருவாதிரை:இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும்.
அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9