தினபலன்
மிதுனம் - 16-04-2023
இன்று வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
திருவாதிரை:பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9