தினபலன்
மிதுனம் - 24-05-2023
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பணவரத்து அதிகரிக்கும்.
திருவாதிரை: காரிய தடங்கல்கள் ஏற்படலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7