மிதுனம் 24-07-2023

மிதுனம் 24-07-2023
Updated on

இன்று குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள். 

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும்.

திருவாதிரை: மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

logo
Kalki Online
kalkionline.com