தினபலன்
மிதுனம் - 25-04-2023
இன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். மனோ தைரியம் கூடும். போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: மனக்கவலை குறையும்.
திருவாதிரை: பணவரவு இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3