சிம்மம் - 08-03-2023
இன்று உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினர் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து
செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
மகம்:இன்று வீடு மனை வாங்க தடை சுபகாரியம் செய்வதற்கு தடை நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். பூரம்:இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். உத்திரம் 1ம் பாதம்:இன்று தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள் கற்பனைகள் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7