சிம்மம் - 10-03-2023

சிம்மம் - 10-03-2023

இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை

வரலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாய் இருப்பார்கள்.

மகம்:இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.

பூரம்:இன்று குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்:இன்று எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com