சிம்மம் - 11-03-2023
இன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு
மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.
மகம்:இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பூரம்:இன்று கணவன் மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். உத்திரம் 1ம் பாதம்:இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9