தினபலன்
சிம்மம் - 17-04-2023
இன்று ஓட்டை உடைசலாக இருந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புதிது வாங்குவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும்.
மகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார வளமும் வந்து சேரும்.
பூரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திரம் 1ம் பாதம்: கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7