தினபலன்
சிம்மம் - 25-04-2023
இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்காது. உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள்.
மகம்: தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது.
பூரம்: பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான கிடைக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7