தினபலன்
துலாம் - 01-03-2023
இன்று பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம் கையில் சரளமாகப் புரளும். கூட்டுத் தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: பணத்தை இழக்க நேரிடலாம்.
ஸ்வாதி: நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: தெய்வபக்தி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9