துலாம் - 15-03-2023
இன்று கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பேச்சின் இனிமை, சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்வீர்கள்.
ஸ்வாதி:இன்று மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7