தினபலன்
துலாம் - 15-04-2023
இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை.
ஸ்வாதி: வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5