துலாம் - 17-03-2023
இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.
பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர் கள். கையில் காசு புரளும். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தாமத மான போக்கு வீண் அலைச்சல் ஏற்பட லாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும்.
ஸ்வாதி: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7