தினபலன்
துலாம் - 19-03-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
ஸ்வாதி: வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: களைப்பு பித்தநோய் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5