தினபலன்
துலாம் -23-01-2023
இன்று கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பீர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஸ்வாதி: காரிய தடை தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வாழ்க்கை தரம் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5