தினபலன்
துலாம் - 30-04-2023
இன்று மன அமைதி உண்டாகும். நன்மை ஏற்படும். தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். அரசியல் துறையினர் எதிலும் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் பேச்சிற்காக பலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
ஸ்வாதி: தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9