மீனம் - 06-03-2023
இன்று தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளின் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும்.
பூரட்டாதி 4ம் பாதம்:இன்று மகிழ்ச்சி கூடும். வில்லங்கங்கள் அனைத்தும் விலகும். சுறுசுறுப்புடன் இந்த நாளை எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். அந்தஸ்து சிறப்படையும்.
உத்திரட்டாதி:இன்று உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். தென்மேற்கு மேற்கு திசைகள் நலம் தரும்.
ரேவதி:இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடையப் பெறுவார்கள். உங்களைவிட தனவந்தர்களாக இருக்கிறவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வங்கியில் பணத்தை சேமிக்கலாம். பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9