தினபலன்
மீனம் - 11-05-2023
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக வரும்.
உத்திரட்டாதி: புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.
ரேவதி: தொழில் தொடர்பான செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5