தினபலன்
மீனம் - 17-03-2023
இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக் கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். நீங்கள் செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: பாராட்டும் கிடைக்கும்.
உத்திரட்டாதி: தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.
ரேவதி: சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9