தினபலன்
மீனம் - 22-04-2023
இன்று அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
பூரட்டாதி 4ம் பாதம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி: துணிச்சல் உண்டாகும்.
ரேவதி: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9