
இன்று தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்: சிறிது சிறிதாக சேமிக்கலாம்.
உத்திரட்டாதி: தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது.
ரேவதி: குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7