தினபலன்
தனுசு - 02-02-2023
இன்று நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.
மூலம்: பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
பூராடம்: தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9