தனுசு - 20-03-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்
முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
மூலம்: புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
பூராடம்: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 7