தினபலன்
விருச்சிகம் - 10-04-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்துச் செல்ல வேண்டும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
விசாகம் 4ம் பாதம்: பொருளாதார வளம் சிறப்படையும்.
அனுஷம்: காரிய அனுகூலங்களும் உண்டு.
கேட்டை: முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9