விருச்சிகம் - 12-03-2023
இன்று கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
விசாகம் 4ம் பாதம்:இன்று உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். அனுஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். கேட்டை:இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6