விருச்சிகம் - 15-03-2023
இன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.
விசாகம் 4ம் பாதம்:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். அனுஷம்:இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். கேட்டை:இன்று காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5