தினபலன்
விருச்சிகம் - 18-03-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்ப தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.
விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.
அனுஷம்: கணவன் மனைவிக்கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம்.
கேட்டை: எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5