தினபலன்
விருச்சிகம் - 22-05-2023
இன்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள்.
அனுஷம்: பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும்.
கேட்டை: வைத்தியச் செலவு இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 8