தினபலன்
ரிஷபம் - 05-02-2023
இன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
ரோஹிணி: மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9