ரிஷபம் - 07-03-2023
இன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:இன்று அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு எண்ணெய் வகையறாக்கள் தோல் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.
ரோஹிணி:இன்று ஸ்பெகுலேஷன் துறைகள் அளவோடு நன்மை தரும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. கலைத்துறையினர் மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஜாதகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9