ரிஷபம் - 08-03-2023
இன்று வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
அரசியல் துறையினருக்கு எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். பணவரத்து கூடும். புதிய காரியங்களை முடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை உடனடியாக கைவிடுவது சிறந்தது.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:இன்று மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். ரோஹிணி:இன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6