
இன்று மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம்.
ரோஹிணி: குடும்ப ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9