தினபலன்
ரிஷபம் - 10-04-2023
இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வியாபாரம் செழிப்படையும்.
ரோஹிணி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிலும் உஷாராக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6