தினபலன்
ரிஷபம் -23-01-2023
இன்று அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது.
ரோஹிணி: வீண்கவலை ஏற்படும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6