
இன்று உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.
ரோஹிணி: வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9