தினபலன்
ரிஷபம் - 30-04-2023
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுப்பீர்கள். முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் வெற்றி நடை போட்டு தேவையானவற்றை பெற்று விடுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.
ரோஹிணி: தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6