தினபலன்
கன்னி - 01-05-2023
இன்று வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலரது தகுதியின்மை உங்களுக்கு தெரிய வருவதினால் மனதில் வருத்தம் ஏற்படும். உங்கள் ஆதங்கத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது.
ஹஸ்தம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9