தினபலன்
கன்னி - 02-03-2023
இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
ஹஸ்தம்: சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9