கன்னி - 06-03-2023
இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:இன்று சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம்.
ஹஸ்தம்:இன்று வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நகைக்கடை துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது. சினிமா நாடகம் நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
சித்திரை 1, 2 பாதங்கள்:இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை தந்தை வழி உறவினர்கள் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9